வீடு கட்ட தேவையான ஆவணங்கள்
வீடு கட்ட ஆரம்பிக்கும் முன்பு நம்மிடம் இருக்கவேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
- வீட்டு மனை பத்திரம்
- வீட்டு மனை பட்டா
- வீட்டு மனைக்கு உண்டான சிட்டா மற்றும் அடங்கல்
- தற்காலிக மின் இணைப்பு ரசீது
- வங்கி கடன் பெற்று கட்டுவதானால் அதுசார்பு ஆவண கோப்பு
இவைகள் நம்மிடம் சரியாக உள்ளதா என சரிபார்த்து கொள்வது நல்லது.
வீடு தவிர வேறு கட்டுமான பணி ஆவணங்கள்
அடுக்குமாடி குடியிருப்பு [Apartments], வணிக வளாகம் [Shopping complex ], மருத்துவமனை [ Hospital ], தொழில்சாலைகள் [Industries / factories], உணவகங்கள் [ Hotels & Restaurants ] கல்வி நிறுவனங்கள் [ Educational Institutes, Schools, Collages ] மற்றும் ஃபார்ம் ஹவுஸ் போன்ற பண்ணை வீடுகள் [ Farm House] போன்றவைகள் கட்ட திட்டமிடும்போது மேற்கூறிய ஆவணங்களோடு சிறப்பு அனுமதி மற்றும் சிறப்பு வரைபட ஆவணங்கள் தேவைப்படலாம்.
மேலதிக விபரங்களுக்கு எங்களிடம் நேரடி ஆலோசனை செய்யலாம்.