வீடு கட்ட திட்டமிடுதல் சேவைகள் மற்றும் ஆலோசனை
வீடு அல்லது கட்டிடம் கட்ட நாம் முடிவு செய்யும்போது அரசின் நடப்பு கால ஆணைகள் படி பல வித அப்ருவல் பெரும் தேவைகள் உள்ளது. நமது வீடுகட்ட.காம் மூலம் சிறந்த சிவில் என்ஜினியர் ஆலோசனைகளுடன் வீடு கட்டும் கனவை செயல்படுத்தலாம்.
கீழ்க்கண்ட சேவைகள் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
1. பிளானிங் – [ Planning ]
2.அப்ரூவல் டிராயிங் – [Approval Drawing ] – அப்ரூவல் டிராயிங் SWP மூலம் Login செய்து தரப்படும் மாநகராட்சி (Corporation), நகராட்சி (Municipality), பேரூராட்சி (Town panchayat), ஊராட்சி (panchayat)
3. லோக்கல் பிளானிங் அதாரிட்டி / உள்ளூர் திட்ட குழுமம் [LPA Corporation, Panchayat]
4.ஸ்டிரக்சரல் டிராயிங் [Structural Design/Drawing]
5. எஸ்டிமேஷன் ( Estimation)
6. மனை வரன்முறை படுத்துதல் ( Land regularization)
7. பட்டா பெயர் மாற்றம் (Patta name transfer)
8. TSLR
9. சொத்து வரி (property tax)
10. குடிநீர் வரி ( Water tax)
11. சொத்து வரி மற்றும் குடி நீர் வரி பெயர் மாற்றம் ( Property tax and Water tax name transfer)
12. கட்டுமான ஆலோசனை
13. வங்கி கடன் பெற உதவுதல்
மேற்படி சேவைகள் நியாயமான கட்டண அடிப்படையில் விரைவாக நாங்கள் செய்து தருகிறோம். விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.
வீடு கட்ட முடிவு செய்ததும் நீங்கள் தயாராக வேண்டிய முக்கிய விஷயங்கள்
நீங்கள் வீடு கட்ட போகும் மனையின் அடிப்படை ஆவணங்களாகிய பத்திரம், மூலப்பத்திரம் (தாய்ப்பத்திரம்), பட்டா, சிட்டா, அடங்கல், சொத்து வரி ரசீது, போன்றவை சரியாக இருக்கும் பட்சத்தில் வீடு கட்டும் முன்பு நீங்கள் கீழ்க்கண்ட சேவைகளை வீடுகட்ட.காம் அஸோசியேட் மூலம் சிறப்பான முறையில் செய்து கொள்ளலாம்.
- மண் பரிசோதனை – முதலில் நாம் கட்ட நினைக்கும் இடத்தில் மண் பரிசோதனை மேற்கொண்டால் தான், நாம் கட்டபோக்கும் கட்டிடம் எவ்வளவு காலம் பலமாக இருக்கும் என்று முடிவு செய்ய முடியும். எத்தனை மாடி அடுக்குகள் கட்டலாம் என்று அதன் பின்தான் தர நிர்ணயம் செய்ய இயலும். சில இடங்களில் மண்ணின் நெகிழ்வு தன்மை அதிகமாக இருப்பின் அதற்கேற்ற கட்டுமான அமைப்பை மேற்கொள்ளவேண்டி இருக்கும். மண் பரிசோதனை செய்யாமல் மண்ணின் நெகிழ்வுதன்மை அதிகம் உள்ள பகுதியில் கட்டிடம் கட்டும் போது காலப்போக்கில் வீட்டின் தரைத் தளம் பள்ளம் விழுவது, கான்கிரீட் பகுதியில் விரிசல் விழுவது தூண்களில் விரிசல் ஏற்படுவது மற்றும் சுவர்களில் விரிசல் ஏற்படுவதை நாம் பல இடங்களில் காணலாம். வீடு கட்ட .காம் உங்களுக்கு மண்பரிசோதனை சேவைகளை செய்து தரும்.
- உத்தேச வரைபடம் – நமது கட்டிடம் எவ்வாறு அமைப்பது, என்ன என்ன வசதிகளை அந்த கட்டிடதில் செய்து கொள்ள முடியும் எத்தனை அறைகள் நிறுவ முடியும், எத்தனை வண்டி மற்றும் கார்கள் நிறுத்த இயலும், எத்தனை கழிவறை, எவ்வளவு நடைபாதை, வீட்டு கட்டிடம் மற்றும் காம்பவுண்ட் இடையில் எவ்வளவு இடைவெளி, போன்றவற்றை முதலில் தீர்மானிக்கவேண்டும். வாஸ்து படி அல்லது நமது வசதிக்கு ஏற்ப பிளான் செய்து 2டி மற்றும் 3டி முறையில் உங்கள் கட்டிடம் எவ்வாறு இருக்கும் என்பதை வரைந்து நீங்கள் தேவையான மாற்றங்கள் செய்து சரியான இறுதியான கட்டிட அமைப்பை முடிவு செயலாம். அவ்வாறு முடிவு செய்யும்போது நீங்கள் வசிக்கும் பகுதி உள்ளூர் அரசு அலுவலக விதிகள், பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி அனுமதித்த விதிகளின் படி திட்டமிட வீடுகட்ட.காம் என்ஜினீயர்கள் உதவி செய்வார்கள்.
- அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் : நாம் உத்தேசித்த கட்டுமான பணி தொடங்கும் முன்பு கட்டிடம் கட்ட அரசின் அனுமதி பெற பிளான் அப்ருவல் பெறவேண்டி இருக்கும். அதற்க்கு தேவையான வரைபடங்கள் வரைந்து புளு பிரிண்ட் எடுத்து உங்கள் பகுதி அரசு துறையான பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி போன்ற ஏதேனும் ஒரு வகையில் பிளான் அப்ருவல் பெறவேண்டும்.
- தற்காலிக மின் இணைப்பு : வீடு கட்ட அனுமதி கிடைத்ததும் கட்டுமான பணிகளுக்கு உண்டான தண்ணீர் தேவை, ஆழ்குழாய் கிணறு அமைப்பில் இருந்து நீர் எடுத்து உபயோகிக்க மற்றும் கட்டிட வேலையில் உள்ள மின்சார தேவைகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நாம் தற்காலிக இணைப்பை வாங்க வேண்டும். அதற்க்கு பிளான் அப்ருவல் நகல் மற்றும், இடத்தின் சொத்துவரி, காலிமனை தீர்வை வரி செலுத்திய ரசீது. வீட்டின் உரிமையாளர் அடையாள ஆவணங்கள் போன்றவை மின்வாரிய துறைக்கு சமர்பித்து தற்காலிக இணைப்பை பெற்றுக்கொள்ளவேண்டும். அதற்க்கு வீடுகட்ட. காம் உதவி செய்யும். வீடு கட்டிய பின் கட்டிட மனையின் தேவைக்கு ஏற்ப சிங்கிள் பேஸ் அல்லது திரீ பேஸ் மின் இணைப்பை மனு செய்து பெற்று கொள்ளலாம்.
- நிலத்தடி நீர் மற்றும் ஆழ்துளை கிணறு அனுமதி : குடிநீர் போர் போடுவதற்க்கு பஞ்சயாத்து, நகராட்சி, மாநகராட்சி போன்ற பகுதிகளில் முன் அனுமதி பெறவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படி போர் போட வீடுகட்ட.காம் தேவையான சேவைகளை செய்யும்.
- கட்டுமான செலவுகள் மற்றும் வங்கி கடன் : மேலே சொல்லப்பட்ட ஐந்து முக்கிய பணிகளை நிறைவு செய்தபின் நாம் வீடு கட்ட ஆரம்பிக்கலாம். பொதுவாக வீடுகட்ட முயற்சிக்கும்போது லேபர் காண்ட்ராக்ட் மற்றும் கட்டுமான காண்ட்ராக்ட் என இருவகைகளில் வீடை கட்டி முடிக்கலாம்.
- லேபர் காண்ட்ராக்ட்: என்பது கட்டுமான பணிக்கு தேவையான கொத்தனார், மேஸ்திரி, நிமிர்ந்ந ஆள் (MC), சித்தாள் (WC) போன்ற நபர்கள் ஒரு ஏஜெண்டு மூலமாக வேலைக்கு அமர்த்தி கட்டுமான பணிகளை முடிக்கலாம். இதற்க்கு நீங்கள் போட்டுள்ள பட்ஜெட் தொகை எப்போதும் கையில் இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு வாரமும் நீங்கள் வேலை செய்தவர்களுக்கு கூலி கொடுக்க பணம் தயாராக இருக்க வேண்டும். சில பல நாட்கள் எதிர்பார்தபடி வேலைக்கு ஆட்கள் வராமல் இருக்க வாய்ப்புகள் உண்டு. இதனால் உங்கள் பணிகள் தாமதமாக வாய்புகள் உண்டு. மேலும் மணல் ஜல்லி போன்றவை நீங்கள் தேவைக்கு ஏற்ப வாங்கும்போது குறித்த விலையில் கிடைக்காமல் அல்லது குறித்த நேரத்துக்கு வராமல் தாமதமானால்கூட நீங்கள் வேலைக்கு வந்தவர்களுக்கு தின கூலி அடிப்படையில் சம்பளம் கொடுத்துதான் தீரவேண்டும் என்ற சூல்நிலை உண்டு. நல்ல அனுபவம் மற்றும் ஆட்கள் பழக்கம் இருந்தால் மட்டுமே இந்த முறையில் வீடு கட்டவேண்டும். உங்கள் கையிருப்பு பட்ஜெட் வங்கி கடனை எதிர்பார்த்து லேபர் காண்ட்ராக்ட் மூலம் கட்டினால் வங்கி கடன் தாமதமானால் குறிப்பிட்ட நேரத்தில் கட்டி முடிப்பது கடினம் . வீடுகட்ட.காம் தேவையான ஏற்பாடுகளை செய்து தரும்.
- மொத்த கட்டுமான காண்ட்ராக்ட் : என்பது நமது தேவைகளை சொல்லிவிட்டு , பணத்தை ஏற்பாடு செய்து கொண்டு, காண்ட்ராக்டருடன் கட்டுமான ஒப்பந்தம் செய்து கொண்டு குறிப்பிட்ட தேதிக்குள் குறிப்பிட்ட தரத்தில் கட்டிடத்தை கட்டிமுடிக்க ஏற்பாடு செய்து கொள்ளலாம். கையிருப்பு மற்றும் வங்கி கடன் பெற்று வீடுகட்ட நினைப்பவர்களுக்கு இந்த முறை வசதியாக இருக்கும். வீடுகட்ட.காம் தேவையான ஏற்பாடுகளை செய்து தரும்.
- வீடு கட்ட ஆரம்பித்தல் : மேற்படி அடிப்படை சேவைகளை பெற்று நிறைவு செய்தபின்பு உங்கள் பணிகளை ஆரம்பிக்க வீடுகட்ட .இன் இணையதளத்தில் விபரங்களை பார்க்கலாம் .