வீடு கட்ட மற்றும் கட்டுமான பணிகளுக்கு வழிமுறைகள்

தனி வீடு,  அபார்ட்மெண்ட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஹோட்டல் முதல் பெரிய தொழிற்சாலை வரை அனைத்து விதமான கட்டுமான பணிகளுக்கு  வீடுகட்ட .காம் உதவி செய்கிறது.

தனி வீடுகள் [ Individual Houses ], அடுக்குமாடி குடியிருப்பு [Apartments], வணிக வளாகம் [Shopping complex ], மருத்துவமனை [ Hospital ], தொழிற்சாலைகள் [Industries / factories], உணவகங்கள் [ Hotels & Restaurants ] கல்வி நிறுவனங்கள் [ Educational Institutes, Schools, Collages ] மற்றும் ஃபார்ம் ஹவுஸ் போன்ற பண்ணை வீடுகள் [ Farm House] போன்ற கட்டிடங்கள் கட்ட தேவையான வழிமுறைகளை நாங்கள்  சிறப்பாக செய்துவருகிறோம்.

வீடு கட்ட.காம் மூலம் கட்டுமான பணி திட்டமிடுதல் வழிமுறைகள் :

  • எங்கள் அஸோசியேட் பொறியாளர்கள் ஆலோசனை மற்றும் சேவைகள் பெற நீங்கள் முன்பதிவு செய்தல் அவசியம்.
  • எங்கள் அலுவலகத்தில் அமர்ந்து நீங்கள் தேவையான ஆலோசனைகளை பெறலாம்.
  • உங்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ள மனையின் பத்திர நகல், வில்லங்க சான்றிதழ் (EC), பட்டா நகல், சிட்டா மற்றும் அடங்கல் நகல், மனையின் உரிமையாளர் அடையாள அட்டை போன்றவை எடுத்துக்கொண்டு எங்கள் அலுவலகத்தில் வீடுகட்ட தேவையான ஆரம்ப கால பணிகளை தொடங்கலாம்.
  • ஆரம்பகால வீடு கட்ட தேவையான சேவைகளை நீங்கள் இலவசமாக கலந்தாலோசிக்க உங்களுக்கு நேரம் ஒதுக்கப்படும்.
  • வீடு கட்ட அல்லது எந்த விதமான கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஆரம்பகால சேவைகளை பெற தனி தனியாக கட்டணம் செலுத்தி சேவைகளை பெற்றுக்கொள்ளலாம். மொத்தமாக செலுத்த அவசியம் இல்லை.
  • உங்களுக்கு என்று ஒரு கோப்பு பைல் உருவாக்கி உங்கள் சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.
  • அரசு அலுவல் ரீதியாக செலுத்தவேண்டிய கட்டணம் மற்றும் எங்கள் சேவைகட்டணம் போன்றவற்றை நீங்கள் நேரடியாக பேசி முடிவு செய்து கொள்ளலாம்.
  • குறிப்பிட்ட ஆரம்ப கால சேவைகளை பெற நீங்கள் அரசு சார்பு அதிகாரிகளை சந்திக்க முன்பாகவே தகவல் தெரிவிக்கப்படும். மேலும் எங்கள் அலுவலக உதவியாளர் உங்கள் உடன் இருந்து அன்றைய நாளில் உதவிகள் செய்வார்கள்.
  • நீங்கள் கலந்து ஆலோசித்து ஆரம்பகால சேவைகளை செய்ய எங்களோடு முடிவு செய்தபின் உங்களால் நேரடியாக ஆவண கையொப்பமிட மற்றும் பல அலுவல் ரீதியான கையொப்பமிட வரமுடியாத சூழலில் எங்கள் அலுவலக உதவியாளர் உங்களை நேரில் சந்தித்து கையொப்பம் பெற்று சேவைகளை தடை இன்றி செய்து தருவார்கள் .
  • கோயம்புத்தூரில் இருந்து அதிக தொலைவில் நீங்கள் இருப்பவரானால் நீங்கள் இருக்கும் பகுதியில் உள்ள எங்கள் கிளை அலுவலகம் அல்லது எங்கள் சார்பு பொறியாளர் அலுவலகங்களில் மேற்படி சேவைகளை நீங்கள் பெற்று பயனடையலாம்.
  • வீடு கட்ட அல்லது எந்தவிதமான கட்டுமான பணி தொடங்க ஆரம்பகால அடிப்படை சேவைகளை அரசு அனுமதியோடு பெற்றபின் உங்களுக்கு தேவையான கட்டிட பொறியாளர், லேபர்  ஏஜெண்டு, கட்டிட காண்ட்ராக்டர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், போன்ற நம்பிக்கைக்குரிய மூன்றாம் நபர்களை உங்களுக்கு பனியமர்த்தி தரப்படும்.